திருகோணமலையில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்
Trincomalee
Risad Badhiutheen
Eastern Province
By Laksi
திருகோணமலையில் (Trincomalee) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
செயற்குழுக் கூட்டம்
இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) கலந்துகொண்டுள்ளார்.
அத்தோடு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |