அரிசி ஆலைகளில் விசேட சோதனை நடவடிக்கை
By Laksi
அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதற்கமைய பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை
இந்தநிலையில், பாரிய அளவிலான அரிசி ஆலை ஒன்றுக்காக தலா 2 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த அரிசி தொகை விநியோகம், விலை, அந்த விலையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அரிசி கிடைக்கின்றதா என்பன உள்ளிட்ட விடயங்களை இவர்கள் ஆராயவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |