நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

Colombo Gampaha Kalutara Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Laksi Dec 09, 2024 11:10 AM GMT

நாட்டில் டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 858 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,927 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மோசமடையும் காற்றின் தரநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோசமடையும் காற்றின் தரநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு மரணங்கள்

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் 5,089 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில், 4,974 நோயாளர்களும், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,623 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை! | Increase In Number Of Dengue Patients

 மேலும், இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பு பாடசாலை மட்ட அபாய குறைப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW