தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை
திருகோணமலை (Trincomalee) மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது, இன்றைய தினம் (28) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க, தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் மனித வலு அபிவிருத்தி வேலை வாய்ப்பு திணைக்களம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தொழிற் சந்தை
தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் தொழில்வாண்மையான பாடநெறிகளை தொடர்வதற்குமான வாய்ப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தல்கள் இங்கு இடம்பெற்றன.
அத்தோடு அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் அரசதுறை சார் இராணுவ ஆட்சேர்ப்பு போன்ற பல துறைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள மாவட்ட இணைப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




