கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு குறித்து வெளியான தகவல்
திருகோணமலை (Trincomalee) மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த குழு கூட்டமானது, இன்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில், மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், திருகோணமலை பொது மீன் சந்தையின் செயல்திறன் குறைபாடுகள், கொட்பே மீன்பிடித் துறைமுகத்தில் நிலவும் சிக்கல்கள், என பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
கடற்றொழிலாளர் சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிடல் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இந்த முக்கிய கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் கேமசந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன, உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |