லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

Syria Lebanon Ministry of Foreign Affairs - sri lanka
By Laksi Sep 30, 2024 06:36 PM GMT
Laksi

Laksi

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கு இலங்கையர்கள் செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இரு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தங்குமிடங்களுக்கு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

அத்தோடு, பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் | Travel Restrictions For Sri Lankan Nationals

இந்த நிலையில், slemb.beiruit@mfa.gov.lk என்னும் மின்னஞ்சல் முகவரி அல்லது 0094 771102510 - சனத் பாலசூரிய, 0094 718381581 - பிரியங்கி திஸாநாயக்க, 00961 81485809 - ஃபஹத் ஹவ்வா ஆகிய அவசர தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டமாஸ்கஸில் உள்ள இலங்கையின் கெளரவத் தூதரக அதிகாரி டொக்டர். அல் ட்ரூபியின் mmd@aldroubi.com என்னும் மின்னஞ்சல் முகவரி அல்லது 00963 944499666, 00963 933858803 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது

கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW