அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

Ampara Tourism Eastern Province Nalinda Jayatissa
By Laksi Dec 19, 2024 01:51 PM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara) - அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தர ஆரம்பித்துள்ளதாக  அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

5000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை

5000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை

சுற்றுலாப் பயணிகள் வருகை

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அருகம்பையின் நிலைமை சீராக உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவாக வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவும் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் இதன் தகவல்களை வெளியிடுவோம்” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW