5000 ரூபாய் நாணயத்தாளை தடை செய்யுமாறு கோரிக்கை
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமகன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டதால் தான் நெருக்கடிகள் ஆரம்பமாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலை
அத்தோடு, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சிறிது அவகாசம் வழங்குவது அவசியம் என்றும் பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கல்வித் தகைமையை விமர்சிப்பவர்கள் கடந்த தேர்தலில் தோற்றுபோனவர்களாக, பின்னடைவை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
முழுமையான கருத்துக்களுக்கு கீழ்வரும் காணொளியை காண்க..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |