காத்தான்குடியில் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளையிட்ட நபர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
30 பேர் கொண்ட காலி ஜின்தோட்டையைச் சேர்ந்த சுற்றுலாக் குழுவினர் காத்தான்குடி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சுற்றுலா விடுதியின் மதில் மேலால் உள்ளே நுழைந்த நபர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகளின் கைப்பையிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதில் 42,500 ரூபா பணமும் மேலும் சிலரிடமிருந்து நகைகளையும் கொள்ளை இட்டவுடன் நகைகளை வாழைச்சேனையிலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்துடன், விற்பனை செய்த பணம் மற்றும் கொள்ளையிட்ட பணம் ஆகியவற்றிற்கு சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வாங்கி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மீதமாயிருந்த இரு தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், 43 வயதுடைய போதைப்போருள் பாவனைக்கு அடிமையான நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |