கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவியேற்ற நஸீர்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நஸீர்(Naseer) கடமையேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளராக எம்.எம்.நஸீர் தனது கடமைகளை நேற்று(09) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கடந்த 06 ஆம் திகதி மாகாண அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அவர்களுக்கான கடிதங்களையும் வழங்கி வைத்தார்.
பதவியேற்பு..
இதன்போது, இலங்கை நிர்வாக சேவையில் விஷேட தரத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியான எம்.எம்.நஸீருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கான கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ஜே.லியாக்கத் அலி கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |