'கிழக்கின் சுற்றுலா மையம்' பயிற்சி திட்டம் ஆரம்பம்

Sri Lanka Tourism Eastern Province
By Rukshy Aug 08, 2024 05:24 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனையில் கிழக்கிலங்கையில் வசிக்கின்ற சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளுக்கு "கிழக்கின் சுற்றுலா மையம்" பயிற்சி திட்டமானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் செயற்குழு தலைவரும் "கிழக்கின் சுற்றுலா மையம்" இந்த கருப்பொருளை ஜனாதிபதி மட்டத்திற்கு எடுத்துச்சென்ற வரும் சமூக ஆர்வலருமான மோகன் கணபதிப்பிள்ளை பங்குபற்றி இருந்தார்.

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் 

நிகழ்ச்சித்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றி இருந்ததுடன் அவர்களுக்கான விரிவுரைகள் அனுபவமும் தேர்ச்சியும் மிக்க விரிவுரையாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி திட்டமானது கிழக்கிலங்கையின் சுற்றுலா துறை முன்னேற்றம் மற்றும் அந்நிய செலாவனியை அதிகரிக்க வழிவகுப்பதோடு அவர்களின் தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்க செய்வதையும் தொழில் அங்கத்துவத்தை வழங்குவதையும் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

இப்பயிற்சி நெறி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதுடன் கிழக்கின் சுற்றுலா மையம் சுற்றுலா வழிகாட்டிக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery