தனியார் வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்

Ministry of Finance Sri Lanka vehicle imports sri lanka Import
By Mayuri Aug 17, 2024 05:34 AM GMT
Mayuri

Mayuri

தனியார் தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்தால் வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம் திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் வரிகள் அதிகரிக்கும் எனவும், மதுபானத்திற்கு விதிக்கப்படும் கலால் வரி வாகன இறக்குமதியிலும் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

தனியார் வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல் | Top Level Information On Vehicle Import

அத்தியாவசிய வாகன இறக்குமதி

மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதத்தின் காரணிகளுக்கு ஏற்ப இந்த வரி திருத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய வாகனங்களை மாத்திரம் முதலில் இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

தனியார் வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல் | Top Level Information On Vehicle Import

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் 1000க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட சிறிய அளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தொடரும் மழையுடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடரும் மழையுடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW