இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology
By Shalini Balachandran Jul 24, 2025 12:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும உதவித் தொகை பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அஸ்வெசும உதவித் தொகை பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

பலத்த காற்று

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Report Sl Tamil Meteorology  

வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் எதிர் கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து

முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் எதிர் கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW