இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Laksi Dec 26, 2024 02:55 AM GMT
Laksi

Laksi

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

 நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை! வெளியாகவுள்ள வர்த்தமானி

விளம்பரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை! வெளியாகவுள்ள வர்த்தமானி

பனி மூட்டம்

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு | Today Weather Report Sl Tamil Meteorology

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்  என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு! நேரில் சென்ற சாணக்கியன்

வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு! நேரில் சென்ற சாணக்கியன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW