நாட்டில் மீண்டும் உப்பு தட்டுப்பாடு
உப்பு இறக்குமதி தாமதமாகிய காரணத்தால் சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.
உப்பு தட்டுப்பாடு
எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
1 கிலோகிராம் உப்பை 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |