புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA May 12, 2025 11:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

புத்தளம் - கற்பிட்டி(Katpitty) முகத்துவாரம் கடற்பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பீடி இலைகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படை சிறப்புத் தேடுதல் மற்றும் மரைன் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகள் சோதனையிடப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு குறித்து சஜித் வெளியிட்ட அறிவிப்பு

மின்கட்டண அதிகரிப்பு குறித்து சஜித் வெளியிட்ட அறிவிப்பு

பெருந்தொகையான பீடி இலைகள்

இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகுகளில் இருந்து 14 உரப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 497 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Large Quantity Of Beedi Leaves Recovered

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 41 வயதுடைய கற்பிட்டி, ஆனவாசலை மற்றும் மாம்புரி ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பில் வெளியான தகவல்கள்

இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பில் வெளியான தகவல்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW