இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Ampara Ratnapura Trincomalee Climate Change Weather
By Laksi Dec 24, 2024 03:04 AM GMT
Laksi

Laksi

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை (Ampara ), ஹம்பாந்தோட்டை (Hambantota) மற்றும் இரத்தினபுரி (Ratnapura) மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு

இடியுடன் கூடிய மழை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு | Today S Weather In Sri Lanka

மாத்தறை தொடக்கம் மாத்தறை , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

பலத்த காற்று 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு | Today S Weather In Sri Lanka

பேருவலை தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW