2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (18) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.
ஜனாதிபதி இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடாளுமன்றிற்கு சற்றுமுன் சமூகமளித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, முதலாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நிசாம் காரியப்பர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |