ஒரேநாளில் பாரிய அளவில் அதிகரித்த தங்க விலை
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (26) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
வரலாற்றில் முதல் முறையாக...
இந்த நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரங்களுக்கமைய, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த வௌ்ளிக்கிழமை24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.