அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 17, 2025 02:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக இன்று(17) வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது.

ரோஹண பண்டார எம்.பிக்கு கொலை மிரட்டல்

ரோஹண பண்டார எம்.பிக்கு கொலை மிரட்டல்

இடியுடன் கூடிய மழை 

மேலும், மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் | Today Climate Change In Sri Lanka

அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள பலுசிஸ்தான்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள பலுசிஸ்தான்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதனிடையே, வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் | Today Climate Change In Sri Lanka

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

அஸ்வெசும நிதி திட்டம் குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும நிதி திட்டம் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW