மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் : முபாற‌க் பகிரங்கம்

Ampara Srilanka Muslim Congress TNA Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 30, 2024 09:55 AM GMT
Laksi

Laksi

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் தேர்தல் காலங்களில் இனவாதத்தை தூண்டி மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதாக ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தவிசாளர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இரு கட்சிகளும் எப்போதும் கணவனும் மனைவியும் போன்று தான் இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

இனவாதம்

மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் சமூகம் உசுப்பேத்தும் அரசியலுக்கு அடிமையாக இருப்பதை காண்கின்றோம். தேர்தல் அல்லாத காலங்களில் இனவாத அரசியலை விரும்ப மாட்டார்கள்.

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் : முபாற‌க் பகிரங்கம் | Tna Support For Sri Lanka Muslim Congress

இன ஐக்கியம் என்பார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வேண்டுமென்றே மக்களை உசுப்பேற்றி தங்களுக்கு வாக்குகளை பெறுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாதத்தை முஸ்லிம்கள் மத்தியில் இணைத்து பிற இனவாதிகளை கொண்டு வந்து அவர்களை பேச வைத்தாவது இனவாதத்தை உருவாக்குவதை காண்கின்றோம்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

மக்களின் வாக்கு

எனவே தான் இவ்வாறான அரசியலை செய்ய வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை கேட்கின்றோம்.

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் : முபாற‌க் பகிரங்கம் | Tna Support For Sri Lanka Muslim Congress

தேர்தல் வந்ததும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவார்கள்.முஸ்லிம் காங்கிரஸ் தமிழருக்கு எதிராக பேசுவார்கள்.

இவ்வாறாக பேசி தத்தமது பக்கம் உள்ள இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறான அரசியலை உலமா கட்சியாகிய நாம் மறுத்து வருகின்றோம்” என முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பில் 743 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 743 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW