நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Skin Care Office of Public Health
By Rakshana MA Jul 17, 2025 03:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது ஒரு அதிவேகமாக பரவும் தோல் நோயான 'டினியா' (Tinea) தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து டினியா தொற்று அதிகமாக பதிவாகி வருவதாகவும் இது ஒரு பூஞ்சை வகை தோல் நோயாகும எனவும் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜனக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.

டினியா நோய் பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்தாலும், தற்போது அது மிகவும் வேகமாக பரவி வருவது கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

அதிகம் பாதிப்பு 

இந்த நோய் தோல், தலைமுடி, நகம் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளை பாதிக்கக்கூடும் எனவும் நேரடி தொடர்பு, ஒரே ஆடைகள் அல்லது தரையில் படுத்தல் போன்றவற்றின் மூலம் இது எளிதாக பரவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Tinea Skin Fungal Infection Sri Lanka Warning 2025

இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று கடும் அரிப்பு (itching) ஆகும் எனவும் இது பொதுவாக வட்டமாக தோலில் தோன்றுவதால், இது ‘ரிங் வார்ம்’ என்றும் அழைக்கப்படுகிறது," என்று வைத்தியர் அகரவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

உடலில் ஈரப்பதம் அல்லது வியர்வை அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது எனவும் குழந்தைகள் இந்த நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா தாக்குதல் : 12 பேர் பலி

இஸ்ரேல் ஹிஸ்புல்லா தாக்குதல் : 12 பேர் பலி

நோய் தொற்று..

கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொற்று மிக வேகமாக பரவி வருவதாகவும், தற்போது தோல் மருத்துவ பிரிவில் பரிசோதனைக்குச் செல்லும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் (20%) இந்த டினியா தொற்றினால் பாதிக்கப்படடிருக்கக் கூடிய சாத்தியம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Tinea Skin Fungal Infection Sri Lanka Warning 2025

பல நேரங்களில் வழக்கமான மருந்துகள் கூட இந்நோயை முற்றிலும் குணமாக்க முடியாமல் போவதாகவும், இதனால் மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் அகரவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள், மக்களுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை பேண, தனிப்பட்ட பொருட்கள் (அங்கியின் சட்டை, துணி, மேக்கப், சீப்பு முதலியன) பகிர்ந்துகொள்வதை தவிர்க்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடி சிகிச்சை பெற அறிவுறுத்தி வருகின்றனர். 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்..!

முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்..!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW