மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 16, 2025 12:50 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருத்தானை, அக்குறானை மினிமினித்தவெளி கிராமங்களை அபிவிருத்திக்கான திட்டம் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி பணியகத்தினால் செயல்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் தேசிய திட்டத்தின் முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், முருத்தானை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட அக்குறானை மினிமினித்தவெளி ஆகிய இரண்டு கிராமங்களையும் 28 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலையில் மகளிர் பாதுகாப்புக்கான டிஜிட்டல் சேவை பட்டியல் திட்டம்

திருகோணமலையில் மகளிர் பாதுகாப்புக்கான டிஜிட்டல் சேவை பட்டியல் திட்டம்

அபிவிருத்தி திட்டம் 

இதன்போது இன்றைய தினம் குறித்த கிராம மக்களுக்கு அனைத்து நிர்வாக கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு சேவையாக மருத்துவ சேவை, அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள், பதிவுத் திருமண சேவை என பல துறை சார்ந்த சேவைகள் என்பனவும் இடம்பெற்றது.

மேலும் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள், முதியோர் அடையாள அட்டை, மரக்கன்றுகள் வழங்குதல் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு | Akkuranai Muruththanai Development 2025

யானை வேலி அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் வைத்தல் மற்றும் 36குடும்பங்களுக்கான மலசல கூடம் அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம், சுகாதார சிகிச்சை நிலைய கட்டட திருத்தப்பணி மற்றும் மூன்று வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றது.   

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery