தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 16, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தற்காலிகமாக விடுதியிலிருந்து வெளியேற்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் பல்கலைக்கழக சாரதி உள்ளிட்ட ஆறு பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மறு அறிவித்தல் வரை நேற்று (15) இரவு விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியெறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தொழுகையில் கவனிக்க வேண்டியவை

தொழுகையில் கவனிக்க வேண்டியவை

வெளியேற அறிவித்தல்

சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன் குறித்த மோதலானது ஒரே வகுப்பினை சேர்ந்த 1 ஆம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Seusl Hostel Clash Students Evicted 2025

இதனால் அம்பாறை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

வைத்தியசாலையில் அனுமதி 

செய்தி பின்னணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர் - தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை (15) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Seusl Hostel Clash Students Evicted 2025

அதன் பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ.நௌபர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.

மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை மின்ஹாவுக்கு காமராசர் இளந்துளிர் சிகரம் விருது

சம்மாந்துறை மின்ஹாவுக்கு காமராசர் இளந்துளிர் சிகரம் விருது

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

வெளிநாடுகளில் கடவுச்சீட்டு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW