தொடருந்துகளில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள்: வெளியிடப்பட்டுள்ள காரணம்
தொடருந்து திணைக்களத்தில் போதியளவான தொழிநுட்ப வல்லுநர்கள் இல்லாமையின் பற்றாக்குறையே தொடருந்துகளில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட பிரதானமான காரணமாகும் என தொடருந்து துணைப் பொது மேலாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
நேற்று (28) மற்றும் இன்று (29) பல தொடருந்துகளில் தொழிநுட்ப கோளாருகள் ஏற்பட்டதையடுத்து பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்திற்கான தீர்மானம்
மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பாக பலமுறை அறிவிக்கப்பட்டும் அரசாங்கம் எந்தவொரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. தொடருந்து தொழிநுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையானது நீடித்தால் அடுத்த வருடம் தொடருந்து சேவையினை முன்னெடுக்க பாரிய சிக்கல்கள் ஏற்படும்.
ஆகவே விரைவில் இவ்வெற்றிடத்திற்கான வல்லுநர்களை பணியமர்த்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை தொடருந்து ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக களனி தொடருந்து பாதை மற்றும் கரையோர பாதைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொடருந்தினை சரி செய்யப்பட்டு வழமை போல் சேவைகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது என தொடருந்து துணைப் பொது மேலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |