ஏறாவூர் இந்து ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Crime
By Rakshana MA Mar 15, 2025 06:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு – ஏறாவூர் ரிசி குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டதோடு ஆலயத்தின் உண்டியல் பணமும் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(14.03.2025) அதிகாலை 01.30 மணியளவில் நடந்துள்ளதுடன், அங்கிருந்த சிசிடிவி கமராவிலும், இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இந்து ஆலயத்தில்..

இதன்போது, ஆலய மூலஸ்தானத்தினுள் இருந்த வெண்கலத்தினாலான நாக சிலை, பிள்ளயைளார் சிலை, விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுடன் உண்டியலும் திருடப்படுள்ளது.

ஏறாவூர் இந்து ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை | Thieves Raid Nagalingeswarar Temple Eravur

ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு இதேவேளை ஆலயத்தில் களவாடப்பட்ட உண்டியல், ஆலயத்தின் முன் பக்க வளாகம் ஒன்றினுள் கிடப்பதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல்

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல்

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 9 சுயேட்சைக்குழுக்கள்

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 9 சுயேட்சைக்குழுக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery