மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 9 சுயேட்சைக்குழுக்கள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 06கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம்(12) மட்டக்களப்பு தேர்தல் அலுவலத்தில் இக்கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பணம்
அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக பிரசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் தயானந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |