திருகோணமலையில் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Sri Lanka Police Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Rakshana MA Mar 17, 2025 04:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலையில் தம்பதி ஒன்றை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கும்பல் ஒன்று திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் பகுதியில் வைத்து நேற்று(16) இடம்பெற்றுள்ளது.

நேற்று மதியம் காரில் வந்த மூன்று நபர்களால் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூரில் இரட்டை கொலை சம்பவம் : கைதான சிறுமி

மூதூரில் இரட்டை கொலை சம்பவம் : கைதான சிறுமி

கைதான சந்தேக நபர்கள்

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசாரணையில், கிண்ணியா பாலத்திற்கு அருகில் இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையில் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் | Thief Gang In Trincomalee

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு திருடப்பட்ட கார், கொள்ளையர்கள் வந்த கார் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார்

மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW