மூதூரில் இரட்டை கொலை சம்பவம் : கைதான சிறுமி
மூதூர் – தாஹாநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(14) இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் மூதூர் – தாஹாநகர் பகுதியைச் சேர்ந்த இராசகுமாரி சக்திவேல் (வயது – 74), இராஜேஸ்வரி சக்திவேல் (வயது – 68) ஆகிய இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
சந்தேக நபர்
இந்நிலையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய சிறுமி சம்பவ தினமே மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று(15) சனிக்கிழமை கொழும்பிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |