வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

Ranil Wickremesinghe Ministry Of Public Security Crime
By Laksi Sep 16, 2024 07:24 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு 

இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு | There Is No Curfew On Polling Day In Sl

ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது எனவும், ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு குறித்து அவசியமான உத்தரவுகளை வழங்கியுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

பொலிஸார் நடவடிக்கை

இதுவரை 500 தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள நிலையில் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை என கூறியுள்ளார்.

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு | There Is No Curfew On Polling Day In Sl

நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட்

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW