தம்மை ஆதரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe
By Mayuri Aug 15, 2024 09:38 AM GMT
Mayuri

Mayuri

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எமது திட்டங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் ஊடாகவே நெருக்கடியிலிருந்த விடுபட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜனாதிபதி செயலகத்தையும், அலரிமாளிகையும், ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றினர். எனது வீட்டை தீயிட்டனர்.

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

பொருளாதார நெருக்கடி

அப்படியான ஒரு சூழலில்தான் நான் நட்டை பொறுப்பெற்றேன். 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தோம்.

தம்மை ஆதரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை | The Presidents Appeal To The Voters

எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது மக்கள் வரிசையிலிருந்த யுகத்தக்கு முடிவு கட்டியுள்ளோம்.

ஏற்பட்டுள்ள இந்த ஸ்திர நிலையை முன்னோக்கி கொண்டு செல்வதன் ஊடாகவே நாம் வெற்றிபெற முடியும். அதற்காக மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் என கோரியுள்ளார். 

வீழ்ச்சியடையும் தங்க விலை

வீழ்ச்சியடையும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW