திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Kiyas Shafe Jan 09, 2025 12:23 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை(Trincomalee) மாவட்ட அரசாங்க அதிபராக டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமார(W.G.M.Hemantha Kumara) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பதிவியேற்கும் நிகழ்வானது, இன்று(09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத ஆசிர்வாதத்துடன் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2003.09.01ஆம் திகதி இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் (பதில் கடமை), ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

அனுபவங்கள்

மேலும், அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் | The New President Of Trincomalee District 2025

அத்துடன், புதிதாக கடமைப் பொறுப்பேற்ற அரசாங்க அதிபரை, மாவட்ட திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரால் வரவேற்கப்பட்டுள்ளார்.

மேலும், திருகோணமலை மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாராச்சி 2025-01-01 இலிருந்து ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் விஷேட செயற்திட்டம்

திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் விஷேட செயற்திட்டம்

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery