முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Benat Mar 21, 2025 07:05 AM GMT
Benat

Benat

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் சமீப நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளில் பணியாற்றி, சட்டரீதியாக அவற்றில் இருந்து விலகாத நிலையில் கடமைக்குச் சமூகமளிக்காத சிப்பாய்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையொன்று தற்போதைய நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விபத்துக்கு உள்ளான இலங்கை விமானப்படை பயிற்சி விமானம்

விபத்துக்கு உள்ளான இலங்கை விமானப்படை பயிற்சி விமானம்

 குற்றச் செயல்களுடன் தொடர்பு 

அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் அவ்வாறு முப்படைகளில் இருந்து தப்பியோடிய சிப்பாய்கள் பலர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்ததை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது | The Fugitives From The Three Forces Were Arrested

அதன் பிரகாரம் தற்போதைக்கு முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் ​மேற்கொண்ட தேடுதல்களில் 1444 பேரும் பொலிசார் மேற்கொண்ட தேடுதல்களில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1394 இராணுவச் சிப்பாய்கள், 136 விமானப்படைச் சிப்பாய்கள், 72 கடற்படைச் சிப்பாய்களும் உள்ளடங்கியிருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.  

வாகன இறக்குமதி! வருவாய் அதிகரிப்பில் சிக்கல்

வாகன இறக்குமதி! வருவாய் அதிகரிப்பில் சிக்கல்