கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம்

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Laksi Sep 17, 2024 08:18 AM GMT
Laksi

Laksi

கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம் IHS தொழிற்பயிற்சி கல்லூரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையில் வசிக்கின்ற தையல் துறையில் ஆர்வமிக்க யுவதிகளை மையமாகக் கொண்டு அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதை பிரதான நோக்கமாக கொண்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்பினையும் சமூக அந்தஸ்தையும் உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இதன்போது, SF Garment குழுமத்தினரின் பூரண அனுசரணையுடன் தொழில் முனைவோருக்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. 

துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு பணிப்புரை

துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு பணிப்புரை

தொழில் வழங்கும் கடிதம்

இந்த நேர்முக தேர்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் வழங்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கின் சுற்றுலா மையம் அமைப்பினுடைய தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு செயற்றிட்டம் | Tailoring And Fashion Design Programme

இந்த நிகழ்ச்சி திட்டத்தில் அதிதிகளாக ஈஸ்டர்ன் டுவர் ஹப்யினுடைய பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சர்ஜுன், IHS தொழிற்பயிற்சி கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஏ.ஏ. அபரி, SF Garment குழுமத்தின் தவிசாளர் மொகமட் சுக்ரி, IHSV கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி எம்.எம். நவாஸ், Techlink தொழில்நுட்ப கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பாத்திமா ரின்ஸா , IHSV கல்லூரியின் பதிவாளர் நஸீமா பானு, SRN சௌமியா உற்பத்திகள் நிறுவனத்தினுடைய தவிசாளர் எஸ். சௌமியா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் வீடொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery