வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வை வலியுறுத்தும் அநுர

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Rakesh Oct 15, 2024 05:23 AM GMT
Rakesh

Rakesh

இந்த வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது எனவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் செயலாளர்கள்

சேதமடைந்த சொத்துக்கள் 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பணியை முதன்மைப்படுத்துமாறும், அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வை வலியுறுத்தும் அநுர | Sustainable Solution Flood Control Anura

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கல ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோட்டை - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்ட தொடருந்து

கோட்டை - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்ட தொடருந்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவர் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவர் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW