சம்மாந்துறையில் கூரிய ஆயுதங்களுடன் கைதான சந்தேக நபர்
சம்மாந்துறை(Sammanthurai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூரிய வாளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(23) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மலையடிக்கிராமம் 01 பகுதியில் வைத்து சென்னல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் சான்றுப்பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |