சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Ampara Eastern Province Crime
By Laksi Dec 11, 2024 10:08 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் திடீர் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே .மதனின் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உணவகங்கள், வெதுப்பகங்கள், மரக்கறி, மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள், ஸ்வீட்ஸ் கடைகள் என்பன பரிசீலிக்கப்பட்டது.

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

சட்ட நடைமுறை

இந்தநிலையில், பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sudden Review At Sainthamaruthu Area Restaurants

மேலும் எதிர்வரும் காலங்களில் உணவு சுகாதாரம் மீதான எமது கண்காணிப்பு தொடரும் என்பதுடன் இறுக்கமான சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசீலனை செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

புத்தளத்தில் விற்பனை நிலையத்தை உடைத்து திருடிய நபர் கைது

புத்தளத்தில் விற்பனை நிலையத்தை உடைத்து திருடிய நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery