புத்தளத்தில் விற்பனை நிலையத்தை உடைத்து திருடிய நபர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Dec 11, 2024 08:48 AM GMT
Laksi

Laksi

புத்தளம் (Puttalam) - தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (10) பிற்பகல்  தங்கொட்டுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேக நபர் கடந்த 09 ஆம் திகதி தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 800,000 ரூபா பணம் மற்றும் 1,490,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் விற்பனை நிலையத்தை உடைத்து திருடிய நபர் கைது | Theft At A Shop In Puttalam Suspect Arrested

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், தங்கச் சங்கிலி , தங்கத் தோடுகள், தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் 461,950 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW