சம்மாந்துறையில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புக்கள் : சட்டத்தை மீறியுள்ள உணவகங்கள்

Sri Lankan Peoples Healthy Food Recipes Eastern Province Sammanthurai Public Health Inspector
By Rakshana MA Jan 31, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் சட்டத்தை மீறிய ஆறு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாதின் தலைமையில் கடந்த புதன்கிழமை(29) திடீர் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்தும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உணவு நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையின் போது, உணவுச் சட்டத்தை மீறிய இரண்டு பேக்கரிகள், உட்பட ஆறு உணவகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

10 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!

10 வருடங்களின் பின் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்!

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அத்துடன், வட்டிலப்பம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் ஒருவருக்கு colour code (உப்பு, இனிப்பு, கொழுப்பு) இடாமல் விற்பனை செய்தமை தொடர்பாக இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சம்மாந்துறையில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புக்கள் : சட்டத்தை மீறியுள்ள உணவகங்கள் | Sudden Raids Carried Out In Sammanthurai

இதனை தொடர்ந்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(30) குறித்த ஆறு உணவகங்களுக்கு மொத்தமாக ரூபா 65000/- தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கைக்காக, உதவி செய்த சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.கே. முகம்மட், பிரதேச சபை வாகன சாரதி அனைவருக்கும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery