காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lankan Peoples Climate Change Weather
By Benat Jan 31, 2025 03:15 AM GMT

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(31) வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பனிமூட்டம்

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் | Weather Alert Sri Lanka

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனு தள்ளுபடி

யாழில் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனு தள்ளுபடி