அம்பாறையில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பணிகளுக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சில இடங்களில் மழை
நாவிதன்வெளி, கல்முனை முஸ்லிம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான வீதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது.
தூர இடங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகளிலும், பல கிளை வீதிகளிலும் வெள்ளநிலைமை பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட அடைமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேச பிரதான வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததினால் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் அனைவரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளநீரை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
நடவடிக்கை
அசாதாரண காலநிலை காரணமாக பகல் வேளைகளிலும் சாரதிகள் வாகன முன்விளக்குகளை ஒளிரச்செய்து பயணங்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வெள்ளநிலைமை காரணமாக வடிகான்கள் அடைபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர்செய்து தருமாறு கல்முனை மாநகர சபையிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |