தேசியப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் கௌரவிப்பு

Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka
By Independent Writer Jul 29, 2024 06:35 AM GMT
Independent Writer

Independent Writer

2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் தடைகளப்போட்டிகள் அண்மையில் கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றது

இத்தடைகளப் போட்டியில் 3000 மீற்றர் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்ற மாணவன் மற்றும் ஐந்தாம் எட்டாம் இடங்களைப் பெற்று அகில இலங்கையில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (28) முத்துஐயன்கட்டில் நடைபெற்றது.

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

பலர் பங்கேற்பு

தடகளப்போட்டியில் 3000 மீற்றர் இல் 9 நிமிடம் 2 செக்கன்களில் ஓடி முதலாம் இடத்தை பெற்ற ஜெயகாந்தன் விதுசன், 9 நிமிடம் 32 செக்கன்களில் ஓடி 5 ஆம் இடத்தை பெற்ற மாரிமுத்து நிலவன், 9 நிமிடம் 47 செக்கன்களில் ஓடி 8 ஆம் இடத்தைப்பெற்ற சந்திரமோகன் இசைப்பிரியன் ஆகிய மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.

தேசியப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் கௌரவிப்பு | Students Won Gold Medals Felicitated

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தாய் தமிழ் பேரவை ஸ்தாபகர் ரூபன், தாய் தமிழ் பேரவை முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சீலன், இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ. பாஸ்கரன் பயிற்றுவிற்பாளர் பு. ஜெயந்தனன், நன்னீர் மீன்பிடி சங்க தலைவர் கிராம அலுவலர் சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல்

வாகன இறக்குமதி அனுமதி குறித்து வெளியான புதிய தகவல்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery