அக்கறைப்பற்றில் ஆசியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு

Ampara Crime School Incident
By Rakshana MA May 24, 2025 07:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

அக்கறைப்பற்று(Akkaraipattu) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாணவியொருவரின் சகோதரனினால் பாடசாலை அதிபர் மற்றும் ஆசியரியர் ஆகியோர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அதிபர் மற்றும் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

தாக்குதல் சம்பவம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறவுள்ள விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிக்க மாணவியின் வீட்டுக்கு சென்ற போது இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அக்கறைப்பற்றில் ஆசியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு | Student S Brother Attacks Teacher With Sword

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று(24) சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு செல்வதற்கு மாணவர்களை  ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஒன்று கூடுமாறு அதிபர் அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவித்தல் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அதன்படி சம்பவ தினமான நேற்று மாலை குறித்த மாணவியின் வீட்டிற்கு தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் மோட்டார் வாகனத்தில் சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து வெளியான பேருந்து விபத்து : ஒருவர் பலி

மட்டக்களப்பில் இருந்து வெளியான பேருந்து விபத்து : ஒருவர் பலி

முதற்கட்ட விசாரணை

பயிற்சி செயலமர்வு தொடர்பில் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை தாக்கிவிட்டு மோட்டர் வாகனத்தினையும் தாக்கியுள்ளார்.

நிலைமை எல்லை மீறியதால் தனக்கு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த ஆசிரியரை காப்பாற்ற சென்ற அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்றில் ஆசியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு | Student S Brother Attacks Teacher With Sword

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் ஆசிரியர் மற்றும் அதிபர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,  தாக்குதல் நடத்திய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலும்,  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மது போதையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கறைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

அம்பாறையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது

அம்பாறையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW