மாணவியின் புகைப்படத்தை தவறான முறையில் பரப்பிய இளைஞர் கைது
Sri Lanka
Sexual harassment
Crime
By Faarika Faizal
மாணவி ஒருவர் பாடசாலை வகுப்பறையில் சக மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்த புகைப்படத்தை, தவறான முறையில் சித்தரித்து சமூக ஊடகங்களில் புகைப்படமாக பரப்பிய இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் இந்த புகைப்படத்தை சமூக ஊடக குழுவொன்றில் வெளியிட்டுள்ளார்.
சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |