யாழில் விபரீத முடிவெடுத்த மாணவி - முதலிடம் பெற்றதால் நேர்ந்த சம்பவம்

Sri Lanka Police Jaffna School Incident
By Faarika Faizal Oct 04, 2025 07:40 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

மாணவியின் புகைப்படத்தை தவறான முறையில் பரப்பிய இளைஞர் கைது

மாணவியின் புகைப்படத்தை தவறான முறையில் பரப்பிய இளைஞர் கைது

மனமுடைந்த மாணவி

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.

யாழில் விபரீத முடிவெடுத்த மாணவி - முதலிடம் பெற்றதால் நேர்ந்த சம்பவம் | Student Jumps From Building In Jaffna

இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற பெற்றோர்

3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற பெற்றோர்

பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு

பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW