பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு

Donald Trump Malaysia Israel-Hamas War
By Faarika Faizal Oct 04, 2025 06:09 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட அமைதித் திட்டத்திற்கு பதிலளித்த ஹமாஸின் அறிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், ட்ரம்பின் காசா திட்டம் குறித்து தனது அரசாங்கம் இன்னும் பெரிய சந்தேகங்களை வைத்திருப்பதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட அமைதித் திட்டம் சரியானது அல்ல, மேலும் அதில் பெரும்பாலானவற்றுடன் நாங்கள் உடன்படவில்லை.

இஸ்ரேல் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் வேண்டுகோள்

இஸ்ரேல் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் வேண்டுகோள்

பலஸ்தீன மக்களை காப்பாற்றுதல்

இருப்பினும், எங்கள் தற்போதைய முன்னுரிமை பலஸ்தீன மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதாகும் என்று அவர் கூறினார்.

பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு | Malaysian Pm Says He Disagrees With Us Plan

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒப்புதல் அந்தத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்திற்கும் உடன்பாட்டின் அறிகுறி அல்ல.

மாறாக இரத்தக்களரியை நிறுத்துவதற்கும், வெளியேற்றத்தை நிராகரிப்பதற்கும், காசா மக்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் ஒரு கூட்டு நடவடிக்கையாகும் என்று அன்வர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது போதும் ஒரு கப்பல் காசாவுக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது போதும் ஒரு கப்பல் காசாவுக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது.

பிரிட்டனின் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல் : இருவர் பலி

பிரிட்டனின் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல் : இருவர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW