மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

Batticaloa Sri Lanka Eastern Province
By Rakshana MA May 18, 2025 06:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை மட்டக்களப்பு(Batticaloa) கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் ஏற்பாட்டிலும் தொழிலதிபர் மு.செல்வராசாவின் முயற்சியினாலும் சுவாமி விபுலானந்தருக்கு முதலாவது கற்சிலையாக இது நேற்று(17) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சின்னம்மை நோயிற்கான மருந்து தட்டுப்பாடு இல்லை! வெளியான அறிவிப்பு

சின்னம்மை நோயிற்கான மருந்து தட்டுப்பாடு இல்லை! வெளியான அறிவிப்பு

கற்சிலை 

சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு! | Stone Statue Of Swami Vipulananda

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவச்சிலை, யாழ் நூல் மற்றும் சுவாமி விபுலானந்தர் நினைவுக்கல் படிகம் என்பனவும் திறந்துவைக்கப்பட்டுள்ளன.  

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடல் கொந்தளிக்கும் அபாயம்!

கடல் கொந்தளிக்கும் அபாயம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW      


GalleryGalleryGalleryGalleryGallery