நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்!

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakshana MA Dec 22, 2024 05:32 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு(NDCU) தெரிவித்துள்ளது.

இதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் 20,519 பேர் பதிவாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

டெங்கு நோயாளர்கள்

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,030 டெங்கு நோயாளரகள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்! | Status Of Dengue Victims Till Date

நாட்டில் டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 858 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியிருந்தது. 

இதன்படி, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,927 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்

டெங்கு மரணங்கள்

அத்தோடு, கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தில் 5,089 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில், 4,974 நோயாளர்களும், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,623 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு : பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்! | Status Of Dengue Victims Till Date

மேலும், இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW