பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் உறுதி : ஜனாதிபதி
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் குற்றவாளிகளுக்கு தண்டனையையும் வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியினை உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இன்று (26) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதிவிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் பரபரப்பினை எற்படுத்தியுள்ள பெருந்தொகையான குற்றச்செயல்கள் நிலவுகின்றன. அவை கால ஓட்டத்தில் மண்ணில் புதையுண்டு மறைந்தபோய் விடுமென குற்றவாளிகள் நினைப்பார்களாயின் அது சட்டம் பற்றிய மக்களின் நம்பிக்கை சிதைவடைவதாகவே அமையும்.
நியாயத்தை நிலைநாட்டும் அரசாங்கம்
ஆகவே, சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டுமாயின் பரபரப்பினை எற்படுத்தியுள்ள குற்றச்செயல்கள் பற்றி மீள்விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் குற்றவாளிகளுக்கு தண்டனையையும் வழங்க வேண்டும்.
எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நாட்டில் இடம்பெற்றுள்ள குற்றச்செயல்களை தமது அரசியல் மேடையில் போராட்டக் கோஷங்களாக மாற்றிக்கொண்டார்கள்.
எனினும் உருவாகிய எந்தவோர் அரசாங்கமும் அது தொடர்பில் நியாயத்தை நிலை நாட்டுவதில் வெற்றி பெறவில்லை. சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ள குற்றச்செயல்கள் சம்பந்தமான பிரதிவாதிகளை அம்பலப்படுத்துவோம் எனவும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை ஈடேற்றுவோம் எனவும் உறுதியாக கூறுகிறோம்.
சிறந்த நாட்டின் கனவு
மேலும் சட்டம், நீதி, நியாயம் ஈடேறுகின்ற தேசமொன்று எமக்குத் தேவை. கிடைத்திருக்கின்ற இந்த மக்கள் ஆணைக்குள்ளேயாவது அந்த தேசத்தை உருவாக்கத் தவறினால் மீண்டும் அவ்வாறான தேசம் பற்றி கனவு காண்பதில் கூட பலனில்லை.
இந்த மக்கள் ஆணையின் தேவை அதற்காக இருக்கின்றது. அந்த ஒலியும் அவலக்குரலும் நிலவுகின்றது.
தமது உறவுகளை இழந்தவர்களின் வெளிபாடுகள் அந்த மக்கள் ஆணைக்குள் பொதிந்திருக்கின்றன. அதற்கான நீதியை நாங்கள் நிலைநாட்டாவிட்டால் யார் அதை ஈடேற்றப் போவது, யாருக்கு அதனை ஒப்படைப்பது? எம்மால் இவை ஈடேற்றப்படாவிட்டால் நீதி, நியாயம் பற்றிய இந்த நாட்டின் கனவு கலைந்துவிடும்.
அதனால் நீதியும் நியாயமும் இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும். குற்றச்செயல்களுக்கு ஏதுவாக அமைந்துள்ள மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் நாங்கள் சட்டத்தை அமுலாக்கி சட்டத்தின் ஆட்சியையும் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜனபதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |