இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Colombo Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Northern Province of Sri Lanka
By Laksi Nov 26, 2024 09:02 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் வெல்வதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2,655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு ,இவ்வருடம் 45,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை!

டெங்கு மரணங்கள் 

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients In Sl

வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,999 நோயாளர்களும், மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,791 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,521 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : மக்களுக்கான எச்சரிக்கை

கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : மக்களுக்கான எச்சரிக்கை

வானிலை மாற்றம் : உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

வானிலை மாற்றம் : உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW